நேரலையில் காணுங்கள்!
போதகர் டேவிட் டி பாஸ்கரன்
பணத்தைக்குறித்த நம்முடைய கண்ணோட்டம்.
யோபுவின் நன்பன் கூறும் அறிவுறையில்
யோபு:22:24 – 26
24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.
26 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.”
பணத்தைக்குறித்து நம்முடைய கண்ணோட்டம் மிகவும் சரியாக இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் வாழும்போது, நம்முடைய வாழ்கையில் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. வாடகைக் கொடுக்க, மளிகை பொருட்கள் வாங்க, பிள்ளைகளின் படிப்பிற்கு என்று எல்லாவற்றிற்க்கும் பணம் தேவை. ஆகவே, வேதமும் “பணமோ எல்லாவற்றிற்க்கும் உதவும்” {பிரசங்கி 10:19} என்று சொல்லுகிறது. தேவன் பணத்திற்கு எதிராளி அல்ல.
நம்முடைய கர்த்தர் அளந்துக் கொடுக்கிறவர் அல்ல. அவர் அமுக்கி, குளுக்கி, சரிந்து விழும்படி கொடுக்கிற தேவன்.
வேதம் சொல்லுகிறது: “வனாந்திரத்திலே அவர்களெல்லாரும் மன்னாவை சேகரித்தார்கள். மிகுதியாய் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை கொஞ்சமாய் சேர்த்தவனுக்கு குறைவானதும் இல்” யாத்திராகமம் 16:17-18
இஸ்ரவேல் ஜனங்ளை குறித்து மேலேயுள்ள வசனம் சொல்லுகிறது. அவர்களுக்கு கைநிைறைய பணம், நகைகள் இருக்கிறது ஆனால் ஒவ்வொருநாளும் தேவன் அவர்களுடைய தேவைகளை சந்தித்தார். அவர்களுக்கு உதவமுடியாது என்பதை தேவன் அவர்களுக்கு காண்பித்தார்.
நம்முடைய தேவன் நமக்கு நேர்தியாய் படியளக்கிற தேவன்.
ஆகவே, நீங்கள் குறைவாய் சேர்த்ததினால் ஒன்றுமில்லாமல் போவதுமில்லை. நிறைவாய் சம்பாதித்தனால் அளவுக்கு அதிகமாக இருக்கப்போவதும் இல்லை.
இன்றைக்கு நாம் விதைத்தால் நூறு மடங்கு பலனை தேவன் நமக்கு தருவார்.
பணத்தை பற்றிக்கொள்ளாதீர்கள், பணத்தை நேசிக்காதீர்கள். பbணத்தைக் கொடுத்த தேவனை நேசியுங்கள்.
தேவனை நேசிக்க வேண்டும், பணத்தை பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் தேவனை நேசித்து அவருக்கு பிரியமாக வாழ விரும்புகிறீறகளா? அப்படியானால் ஆஸ்தியும், ஐசுவர்யமும் உங்கள் வீட்டில் நிச்சயமாக தங்கும். வேதமும் அப்படிதான் சொல்லுகிறது.
சங்கீதம்:112:1-3 “அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பியவான்.
2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3 ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.”
தாவீது இராஜாவாக அபிஷேகிக்கபட்டு இருந்தாலும் சவுலினால் துரத்தப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கும் போது, பசிக்கு உணவு கேட்டு நாபால் என்ற பணக்கார மனிதனிடத்தில் அனுப்புகிறார். தரமுடியாது என்று சொன்னதும் இல்லாமல் ஏளனமாக பேசி அனுப்புகிறான்.
நாபாலுக்கு பணம் நிறைய இருக்கிறது, ஆனால் கொடுக்கக் கூடிய குணம் இல்லை. அவள் மனைவி வந்து தாவீதினிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தை கொடுத்தாள், அநேக சமயங்களில் கொடுக்கும் குணம் இல்லாத கணவனுக்கு கொடுக்கும் குணமுள்ள மனைவியும், குணமில்லாத மனைவிக்கு கொடுக்கும் குணமுடைய கணவரும் இருப்பதை பார்க்க முடியும். தேவன் சகலவற்றையும் நேர்த்தியாக செய்கிறார் ஏற்றதுணையும் கூட.
1 சாமுவேல்:25:39 “நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; “
நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் உங்களை ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் லாபமில்லை.
யோபு தன் நன்பனுக்கு பதில் சொல்லும் போது நீங்கள் சொல்வதைப்போல நான் என் ஐசுவர்யத்தை குறித்து பெருமைபட்டதும் இல்லை.
யோபு:31:24-27 “நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
25 என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
26 சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:
27 என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,
நீங்கள் பணத்தையும், பொருளையும், ஆஸ்தியையும் சேர்த்து வைத்து இருந்தாலும் தேவன் நம்மோடு இருக்க வேண்டும்.
கர்த்தருடைய ஆசீர்வாதத்திர்க்கு எல்லையில்லை. அவருடைய கிருபை நம்மோடு இருந்தால் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அவர் நம்மை உயர்த்துவார், நம்மை அனேகருக்கு ஆசீர்வாதமாகவும் வைப்பார்.
1 நாளாகமம்:28:20 “தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.”
நீங்கள் எவ்வளவு ஆஸ்தி, பணம் சேர்த்து வைத்திருந்தாலும், கர்த்தர் உங்களோடு இல்லாவிட்டால் நீங்கள் எதை செய்து முடிக்க வேண்டுமோ அதை செய்து முடிக்க முடியாது.
உங்களிடத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் அவரில் நிலைத்து இருப்பீர்கள் என்றால் அவர் நம்மைக்கொண்டு எல்லாவற்றையும் முடிப்பார். நம்மால் முடியாததை நம்மைக்கொண்டே செய்து முடிப்பார்.
1 நாளாகமம்:29:3 “இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்”
யோபு கொடுக்க கொடுக்க அவருக்கு செல்லவம் பெருகிக்கொண்டே தான் இருந்தது.
கர்த்தருக்காக ஒன்றை செய்யும் போது ஏதோ ஒன்றை செய்கிறோம் என்று செய்யாமல் விசுவாசித்து செய்ய வேண்டும்.
1 நாளாகமம்:29:9 “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.”
நாம் யாருக்காக எதை கொடுத்தாலும் உற்சாக இருதயத்தோடே கொடுக்க வேண்டும்.
நீங்கள் தேவனை நேசிப்பதினால் தான் அவருக்கு கொடுக்கிறீர்கள். கடவுளுக்கு கொடுக்கிறேன் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்திலே இருந்தால், நீங்கள் கொடுக்கிற விதம் வித்தியாசமாய் இருக்கும்.
நீங்கள் தேவனிடத்தில் மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றால் பணத்தின்மீது உங்களுடைய கண்ணோட்டம் சரியாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு உங்களிடத்தில் இருக்கிற வீடு, பணம், சொத்து, ஊழியம் எல்லாமே நூறு சதவீதம் 100% கர்த்தர் கிருபையாய் கொடுத்தது. ஆகவே நாம் தாராளமாய் கொடுக்க வேண்டும்.
மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ, அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்யாமல் எதிர்பார்க்க கூடாது.
மற்றவர்கள் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் கொடுக்க வேண்டும். பணத்தைக்குறித்த சரியான கண்ணோட்டம் இருக்கிறவர்கள் யாரோ அவர்களுடைய வாழ்கையில் ஐசுவர்யத்தை தேவன் ஏராளமாய் பெருக செய்வார்.
நம்மை பார்க்கிறவர்கள் தேவனை மகிமைப்படுத்துவார்கள்.
உங்கள் வாழ்கையிலே நீங்கள் கொடுத்ததை அறுக்க வேண்டும் என்றால் பணத்தைக்குறித்த சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும்.
கர்த்தருடைய வீடுகளிலே கர்த்தருடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஒருவரும் கெட்டுப்போகமாட்டார்கள்.
நம்முடைய குடும்பத்தை தற்காத்துக்கொள்ள ஜெபத்தில் நாம் கவனமாயிருக்க வேண்டும்.
உங்களை சுற்றிலும் இருக்கிற காரியங்கள் ஒன்றுமே சரியில்லை என்றாலும் உங்களுடன் இருக்கிற தேவன் சரியானவர் என்பதால் உங்களை சுற்றியுள்ள எல்லாவற்றையும் சரிசெய்ய அவரால் முடியும்.
நாம் தேவனுக்கு அல்லது யாருக்கு கொடுத்தாலும் இந்த 4 பன்புகள் இருக்க வேண்டும்;
- மனப்பூர்வம்
- சந்தோஷம்
- உற்சாகம்
- உத்தமம்
இந்த நான்கு விஷயங்களும் நம்மிடத்தில் இருந்தால் நிச்சயமாக தேவன் அதிலே மகிமைப்படுவார். அப்படி உற்சாகமாக,சந்தோஷமாக, மனப்பூர்வமாக உத்தமமாக கொடுக்காவிட்டால் கொடுத்ததில் எந்த பயனுமில்லை.
நாம் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு காக்கப்பட்டு கொண்டு இருக்கிறோம்.
பணத்தை வைக்க வேண்டிய இடத்திலே தேவனை வைக்ககூடாது. தேவன் எப்பொழுதும் உங்கள் வாழ்கையின் முதல் இடத்தில் தான் இருக்க வேண்டும்.
பணத்தைக் குறித்த உங்களுடைய கண்ணோட்டம் எப்பொழுதும் சரியாக இருக்க வேண்டும்.
ஆமென்…
கண்ணோட்டம் அடுத்த வாரம் தொடரும்…
One reply on “3G Church Sunday Message 13.06.2021 {தமிழ்}”
Praise the lord jesus christ