2 கொரிந்தியர்:9:10 ” விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.”
கடந்த மாதம் 1 ஆம் தேதி தேவன் நம்மோடு எழுந்து நட என்று தேவன் நம்மிடத்திலே சொன்னார்.
இதுவரை நடந்திராத அதிசயங்களும், இதுவரை நடந்திடாத அற்புதங்களும் இந்த மாதத்திலே நடக்கப்போகிறது.
இந்த மாதத்திலே கர்த்தர் நம்முடைய வாழ்கையிலே:
விதைக்கிறதற்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும், நமக்கு விதையைக் கொடுத்து அந்த விதையை பெருகவும் பண்ணுவார்.
இந்த மாதத்தில் உங்களுக்கு தேவைகளின் குறைவு இருக்காதபடிக்கு கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார்.
லூக்கா:6:38 “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். “
விசுவாசத்திலே பேசுவது என்பது நம்முடைய இருதயத்தை சார்ந்ததாய் இருக்கிறது.
நம்மிடத்தில் தேவனுக்காக கொடுக்க ஒன்றுமே இல்லையென்ற சூழ்நிலையில், உங்கள் வாழ்கையை விசுவாசத்தின் வார்த்தைகளால் ஆரம்பிக்க வேண்டும்.
வேதம் சொல்லுகிறது: “காணக்கூடியவைகளெல்லாம் தோன்றப்படுகிறவைகளால் உண்டாக்கப்படவில்லை, அவைகளெல்லாம் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது.”(எபிரேயர்:11:3)
நாம் காண்கிற எல்லாம் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது என்றால், கிறிஸ்துவுக்கும், தேவனுக்கும் அந்த வார்த்தையிலே எவ்வளவு வல்லமை இருந்ததோ அவ்வளவு வல்லமை இருந்ததோ அவ்வளவு வல்லமையும் நமக்கும் இருக்கிறது.
விதைக்கிறவனுக்கு விதையை தருகிறவர், நமக்கு விதையை தந்து, அதை பெருகவும்பண்ணி உங்கள் நீதியின் விலைச்சளைப் பெருகப்பண்ணுவார்.
நம்முடைய அறுவடை எப்படி இருக்க வேண்டுமோ, அதற்கு தகந்ததாக உங்களுடைய விதையும், விதைப்பும் இருக்க வேண்டும்.
நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, எந்த அளவினால் விதைக்கிறீர்களோ, அந்த அளவினால் தான் உங்களுக்கும் அளக்கப்படும்.
விதைக்க வேண்டியப் பொருள் எந்த இடத்திலே விதைக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்திடத்திலே விதைக்கப்பட வேண்டும். விசுவாசத்தின் வார்த்தைகள் விதைக்கப்பட வேண்டும்.
உங்களுக்கு கொடுக்கப்பட்டது கொடுக்கப்பட்டதாகவே இருந்தால் அது கொடுக்கப்பட்டதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே நம்மிடத்திலே கொடுக்கப்படுகிற எதுவாக இருந்தாலும் பெருகப்படவேண்டும்.
ஏனென்றால் பெருக்கத்தின் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம், நாம் பெருகியே ஆக வேண்டும். பெருகுவதற்கான சூழ்நிலை இல்லாதப்போதும் பெருக்கத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
ஆதியாகமம்:26:12,13 “ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
13 அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.”
நாம் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் நம்மேல் இருக்கும்.
கர்த்தர் உங்களுக்கு விதையைக் கொடுக்கிறார் என்றால், விசுவாசித்து அந்த விதையை விதைக்கும் போது தேவன் அந்த விதையை அல்ல, நம்மை ஆசீர்வதிப்பார்.
எதையும் விதைக்க முடியாத, விலைக்க முடியாத, அறுக்க முடியாத சூழ்நிலையிலும் ஈசாக்கு விதைக்கிறார். கர்த்தர் அவரோடு இருந்தபடியால் அவருக்கு நல்ல விலைச்சலை தந்தார்.
சங்கீதம்:126:5,6 “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.”
ஒருவேலை இன்றைய சூழல் விதைக்கும் போது, கண்ணீர் விடுகிற சூழலாய் இருந்தாலும், மனதில் ஏராளமான கேள்விகளோடுக்கூட இருக்கிற சூழல் இருக்கலாம், எந்த சூழலிலும் கர்த்தர் என்னோடுக்கூட இருக்கிறார், அவர் ஒரு மாற்றத்தை தருவார் என்று விசுவாசித்தின் விதைகளை விதைத்தால் நிச்சயமாக அருவடை செய்வீர்கள்.
எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் நம்மை கைவிடமாட்டார்.
பிரசங்கி:11:6 “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.”
நம்முடைய வேலை விதைப்பது மட்டும் தான், நாம் விதைத்தால் மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொள்வார். விதைக்க வைத்தவர் விளையச்செய்வார்.
நாம் நேசிக்கிற தேவன் பெரியவர், அவர் நம்மை கைவிடவும் மாட்டார், வெட்கப்படுத்தவும் விடமாட்டார்.
ஏசாயா:55:10 “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
11 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
நீங்கள் எந்த விசுவாசத்தினால் விதைக்கிறீர்களோ, அதை விசுவாத்தின் அதன் அடிப்படையில் தான் அறுவடை செய்யப்படும்.
இந்த மாதத்திலே தேவன் உங்களுக்கு நல்ல விளைச்சலைத்தருவார்.
ஆமென்…