செய்தி: போதகர் த. பாஸ்கரன்
யோவான்:5:8 “இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.”
இந்த மாதத்திலே தேவன் நம்மை என்ன செய்ய சொல்லுகிறார் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த நிமிஷமும் உங்களுக்கு அற்புதம் நடக்கும் மாதத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே நாம் விசுவாசிக்க வேண்டும்.
எல்லாம் முடிந்துப்போய்விட்டது என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளிய வர வேண்டும். நம்முடைய கண்ணோட்டம் மாற வேண்டும். நம்முடைய எண்ணங்களிலுருந்து எழுந்து வர வேண்டும்.
38 வருஷமாக வியாதியில் இருந்தாலும் நீங்கள் முடியாது என்ற கண்ணோட்டத்தில் இருந்து எழுந்து வர வேண்டும். தேவன் விடுவி்ப்பார் என்ற கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும்.
நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள்.
தோற்றுவிட்டோம் என்ற மனநிலை வந்துவிட்டால், வெற்றியைக் காண முடியாது.
வெறும் ஆசைகள் மட்டும் உங்கள் வாழ்கையின் லட்சியங்களை அடைய உதவி செய்யாது, விசுவாசமும் வேண்டும்.
நீங்கள் எழுந்திருந்து நடக்கும்போது, இதுவரை நடந்திராத எல்லாவற்றையும் தேவன் இந்த மாதத்திலே நடப்பிப்பார்.
நீங்கள் எழுந்து நடங்கள், கர்த்தர் காரியங்களை நடப்பிப்பார்.
யோவான்:5:5-6 “5 முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
6 படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
இயேசு அந்த வியாதியஸ்தனி்டம் ஏன் நீ சுகமாக வேண்டும் என்று விரும்புகிறாயா? என்று கேட்கிறார்.
இயேசு கிறிஸ்துவுக்கு சுகமாக்க தெரியும், அவர் அந்த வியாதியஸ்தனுக்கு சுகமாக வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதா என்று கேட்கிறார். இயேசு கிறுஸ்து அவனுடைய விருப்பத்தை அறிந்துக்கொள்ள விரும்புகிறார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார், நீங்கள் அதை பெற்றுக்கொள்ளுவோம் என்று அறிக்கையிடவும், விசுவாசிக்க வேண்டும்.
ஆவிக்குறிய சோர்விலிருந்து, ஆவிக்குறிய பெலவீனத்திலிருந்து, ஆவிக்குறிய யுத்தத்திலிருந்து விடுப்பட விரும்புகிறீர்களா?
இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பது அவசியமல்ல. நம்முடைய தேவன் சர்வ ஞானி, அவர் எல்லாவற்றையும் அறிந்து இருக்கிறார்.
தேவன் உங்களுக்கு விடுதலையைத் தர விரும்புகிறார், நீங்கள் அதை பெற்றுக்கொள்ள தயராக இருக்க வேண்டும்.
இந்த உலகம் உங்களுக்கு வாய்ப்புக்கொடுக்கவில்லை என்றால் தேவன் உங்களுக்கு வாய்ப்புக்கொடுப்பார்.
உங்கள் சூழ்நிலை எப்படி இருந்தாலும் தேவன் உங்களை சுகப்படுத்துவார். 38 வருடமாக பெதஸ்தா குளத்தில் வியாதியஸ்தனாக இருந்தவரைப்போல தண்ணீரை விசுவாசிக்காதீர்கள், பொருளின் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்காதீர்கள். தேவனைப்பற்றிக் கொண்டு அவரில் விசுவாசமாக இருங்கள்.
மனிதர்கள் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதைப் பற்றி பேசுவதைவிட, தேவன் உங்களுக்காக எதையும் செய்வார் என்று விசுவாசித்து அவரை துதியுங்கள், நிச்சயமாக அற்புதங்களையும் அதிசயங்களையும் உங்களுடைய வாழ்கையில் செய்வார்.
பி்ரச்சனைகளில் மூழ்கிக்கொள்ளக்கூடாது, பிரச்சனைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
யோவான்:5:14 “அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்”
இரட்சிப்பு வந்த பிறகு இரட்சிப்பை இழந்துபோகக்கூடிய செயலில் ஈடுப்படக்கூடாது.
யோவான்:8:10 “இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.”
இந்த மாதத்திலே தேவன் எல்லாவற்றையும் வாய்க்கப் பண்ணுவார். அவரில் சார்ந்து அவரை விசுவாசித்து இருங்கள். தேவன் உங்களுக்கு சம்பூரமான முடிவைத் தருவார்.
ஆமென்…