Categories
Message on communion

3G Church: Message on Communion 04.07.2021 தமிழ் & English

திருவிருந்து என்பது நம்முடைய எல்லா குறைவுகள் மத்தியிலும் தேவனிடத்தில் நெருங்கி வருகிற நேரம்.

https://3gchurch.cw.center/wp-content/uploads/sites/11804/2021/07/04.07.2021-1.mp3

போதகர்: டேவிட் த. பாஸ்கரன்

1 கொரிந்தியர்:11:27-31 “இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.

28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

29 என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.

30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.”

இயேசுவை சொந்த இரட்சதராக ஏற்றுக்கொண்ட நாமெல்லாம் கர்த்தருடைய இரத்தத்தினால் கழுவப்பட்ட நீதிமானாய் இருக்கிறோம்.

நாம் பாவியாய் இருந்தாலும், கர்த்தரிடத்தில் போகும்போது அவர் நம்மை அவருடைய இரத்தத்தினால் நம்மை கழுவி சுத்திகரித்து மீண்டும் நம்மை பாத்திரவானாய் மாற்றுகிறார்.

திருவிருந்து உங்களை நினைவுக்கூறுவதற்கான நேரமல்ல, திருவிருந்து கிறிஸ்துவை நினைக்கூறுவதற்கான நேரம். என்றைக்கு நீங்கள் உங்களை நினைவுக்கூர்ந்து திருவிருந்தில் பங்கெடுக்கிறீர்களோ, அது அபாத்திரமான திருவிருந்து.

திருவிருந்து உங்களுடைய பாவத்தை நினைவுக்கூறுகிற நேரமல்ல, நம்முடைய பாவத்தையெல்லாம் சுத்திகரித்த கர்த்தரை நினைவிக்கூறுகிற நேரம் தான் திருவிருந்து.

சபையிலுள்ள அனைவரும் வந்து, ஒருமனப்பட்டு பாத்திரத்திலே பங்கெடுப்பதும், நாம் குடும்பமாக பங்கெடுப்படுபதும் தான் திருவிருந்து.

சாப்பாடு என்று பார்க்கிறவரை அது வெறும் உணவு மட்டும் தான். நமக்காக பிட்கபட்ட சரீரம் என்றும், நமக்காக சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தமென்றும் பார்க்க நாம் பார்த்தால் அது நமக்கு மருந்தும், சுகமும், ஜீவனுமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையின் விசுவாசிகள் திருவிருந்தை உணவை போல பார்த்து, ஒரு அர்த்தமில்லாமல் பங்கெடுத்து, நமக்கு மருந்தும், சுகமும், ஜீவனுமாய் தேவன் ஏற்படுத்திய திருவிருந்தின் நன்மைகளை அனுபவிக்காமல், அநேகர் பலவீனர்களாய், வியாதியஸ்தர்களாய் இருந்தனர், சிலர் அதே நிலையில் மரித்தும் போனார்கள்.

ஆகவே தான், நாம் இயேசுவை நினைவு கூர்ந்து தான் திருவிருந்தில் பங்கெடுக்கிறோமா என்று நம்மை நாமே
நிதானித்து அறிந்தால், இயேசுவின் இரத்தத்தை குறித்தும், சரீரத்தை குறித்தும் குற்றமற்றவர்களாய் இருப்போம்.

திருவிருந்துக்கு வரும்போது, “ஆண்டவரே, பாவியாய் இருந்த எனக்காக உம் இரத்தம் சிந்தி என்னுடைய
பாவங்களையெல்லாம் கழுவினீர். இன்னும் என்னை நேசிக்கிறீரே. உம்முடைய சொந்த குமாரனை விட எங்களை அதிகமாக நேசித்ததற்காய் ஸ்தோத்திரம்.” என்று அறிக்கையிட்டு, திருவிருந்தில் பங்கெடுக்க வேண்டும்.

திருவிருந்து என்பது நம்முடைய எல்லா குறைவுகள் மத்தியிலும் தேவனிடத்தில் நெருங்கி வருகிற நேரம்.

“எங்கள் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம், இயேசுவின் நாமத்தினாலே வருகிறோம். கல்வாரி சிலுவையிலே எனக்காய் சிந்தப்பட்ட இரத்தத்திற்காய், அதற்கு அடையாளமாய் இருக்கிற திராட்சை இரசத்திற்காக, பிட்கப்பட்ட சரீரத்திற்கு அடையாளமாய் இருக்கும் இந்த அப்பத்திற்காக ஸ்தோத்திரம்.

இது வெறும் அப்பமும், திராட்சை இரசத்திற்காக அல்ல, நாங்கள் விசுவாசிக்கிறபடி எங்களுக்காய் பிட்கப்படுகிற இயேசுவின் சரீரத்திற்காகவும் எங்களுக்காக கிறிஸ்து சிந்தப்படுகிற இரத்தத்தையும் நினைவுக்கூறுகிற நேரமாகவும்.

எங்களுக்காக சிலுவையிலே நீர் சம்பாதித்த ஆசீர்வாதத்தையும், மீட்பையும், சுகத்தையும், பெலனையும், ஆரோக்கியத்தையும், நீடிய வாழ்வையும், சமாதானத்தையும், செழிப்பையும், அத்தனை ஐசுவர்யத்தையும் விசுவாசித்து நாங்கள் பெற்றுக்கொண்டோம் என்று நினைவுக்கூறுகிற நேரமாய் இருக்கிறபடியால் ஸ்தோத்திரம்.

இந்த அப்பத்தையும், இரசத்தையும் ஆசீர்வதிப்பீராக.இதிலே நாங்கள் பங்கெடுக்கும் போது உம்மை நினைவுக்கூற உதவி செய்வீராக. சுகம், பெலம், ஆரோக்கியம் உண்டாவதாக. வியாதிகள் மறைவதாக, தெய்வீக சுகம் உண்டாவதாக. தொடர்ந்து பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியில் அசைவாடுகிறதற்காக ஸ்தோத்திரம். எல்லா துதியும், கனமும், மகிமையும் உமக்கே செலுத்துகிறோம். இயேசுவின் நாமத்தி்ல் ஆமென்… “

இந்த ஜெபத்தை விசுவாசத்தோடு செய்து உங்கள் வீடுகளிலேயே திருவிருந்தை ஆயத்தம் செய்து பங்குப்பெறலாம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Sunday Communion Service {04/07/2021} English

Time to participate in the communion is the time to
get closer to God despite all our shortcomings.

Message by Pastor David D Baskaran

I Corinthians 11:27-31 “27 So then, whoever eats the bread or drinks the cup of the Lord in an unworthy manner will be guilty of sinning against the body and blood of the Lord.

28 Everyone ought to examine themselves before they eat the bread
and drink from the cup.

29 For those who eat and drink without discerning the body of Christ eat
and drink judgment on themselves.

30 That is why many among you are weak and sick, and a number of you
have fallen asleep.

31 But if we were more discerning with regard to ourselves, we would not
come under such judgment.

As we have accepted Jesus Christ as our Saviour, we are washed by his blood and have become righteous.

When we enter into his presence, with our sinful state, He cleanses us by his blood and makes us worthy.

Communion is not the time to remember yourself or your sins, but it’s the time to remember God. When you attend communion remembering yourselves then it is unworthy.

The communion is not the time to remember your sin, but it is the time to remember the LORD who cleanses our sins.

Everyone in the church should participate in the communion with one-hearted and also as a family when we take communion at home.

If we see communion as food, it is one among the food. But if you see it as the blood of Christ, the blood of Christ becomes healing, medicine, life, etc.

Apostle Paul addressing the state of believers in the Corinthian church that because you partook meaninglessly in communion thinking that it is as food, you were notable to enjoy the benefits of the God who made communion as healing, medicine, life, etc. and many of you are with weakness, with sickness and many have died in the same condition.

Therefore, we need to judge ourselves while we partake in communion – Are we remembering Jesus who shed his own blood for us? if not then we will be guilty of the Blood and Body of Jesus Christ.

So when you come for communion, we need to confess everything to the Lord and say “Jesus when I am a sinner, you shed your own blood for our sins and you cleansed us by your blood. You still love us. You sent your own begotten son for us. Thank You for loved us more than your own son Jesus.”

Communion is the time to get closer to the Lord despite all our shortcomings.

“Our dear Heavenly Father, we come to your presence in the name of Jesus Christ. We praise you for the Blood you shed on the cross of Calvary, and for this wine, which is a symbol of it, for this bread, which is a symbol of the flesh that was broken for us.

Lord, it is not just bread and wine, it is the symbol of a broken body and shed blood of Jesus. And it’s the time to remember Jesus.

It’s the time to believe, remember, and thank God for what we have received the blessings and redemption, and the happiness, and the strength, and the health, and the long life, and peace, and prosperity, and all the riches that you have earned on the cross for us.

Bless this bread and wine. Help us to remember you when we partake in
communion. Also let strength, health, healing fill us. Let sickness disappears and divine healing fill us. Praise be to the Holy Spirit for constantly moving among us. We give You all praise, honor, and glory. Amen, in Jesus’ name.”

You can do this prayer faithfully and prepare and participate in the communion in your own homes also. You are blessed.

Have a meaningful Communion, remember Jesus not you and your sins.