Categories
Sunday Sermon {Tamil}

3G Church Sunday Message 27.06.2021 {தமிழ்}

LIVE NOW! Sunday Worship 27.06.2021 {ஞாயிறு ஆராதனை}
https://3gchurch.cw.center/wp-content/uploads/sites/11804/2021/07/27.06.2021-boosted-volume.mp3

போதகர்:டேவிட் டி பாஸ்கரன்

மத்தேயு 6:19-21 “19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”

நீங்கள் எதற்காக உங்கள் வாழ்கையிலே அதிக நேரம் செலவிடுகிறீர்களோ அது உங்களுக்கு பொக்கிஷமாக இருக்கும்.

உங்களைக்குறித்து, உங்கள் வாழ்கையைக் குறித்து, உங்கள் எதிர்காலத்தைக் குறித்து, ஒரு பெரிய நோக்கத்தை தேவன் வைத்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்க்காக போக சொல்லும்போது, இயேசு அவர்களைப் பார்த்து சொல்லுகிறார்:

லூக்கா:10:7 “7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.”

இப்போழுது இருக்கிற காலக்கட்டத்தில் அனேக விசுவாசிகள்; ஊழியர்கள் தங்கள் வீட்டிற்கு வந்தால் காணிக்கை கொடுப்பார்கள், காணிக்கை கொடுப்பது தவறல்ல. விசுவாசிகளிடம் காணிக்கை கொடுக்க பணம் இல்லாதபோது, மனம் மிகுந்த வேதனை அடையும். இதுப்போல் ஒரு சூழ்நிலையை ஊழியர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆகவே கொடுப்பதை குறித்த சரியான சத்தியத்தை அறிந்து கொள்வது அவசியம்.

நீங்கள் சத்தியத்தை சார்ந்திருந்தீர்ப்பீர்கள் என்றால், சத்தியம் உங்களை சரியான பாதையிலே, சரியான வழியிலே உங்கள் வாழ்கையிலே உங்களை வழிநடத்தும்; நீங்கள் சத்தியத்தின்படி வாழுவீர்கள், சத்தியத்தின்படி நடப்பீர்கள்.

கர்த்தர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நோக்கத்திற்க்காக அழைத்திருக்கிறார்.

நம்முடைய வாழ்கையில், நாம் வேலைசெய்து சம்பாதிக்கிற ஒவ்வொரு பணத்தைவிட, தேவனுடைய ஊழியத்தை செய்வதில் வரும் சமாதானம் பெரியதாய் இருக்கும்.

நம்முடைய வேலைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட தேவனுக்கும், அவருடைய ஊழியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஊழியர்களை வீட்டிற்கு அழைத்தால் பணம் கொடுக்க வேண்டுமென்று யோசித்து ஊழியர்களை வீட்டிற்கு அனேக விசுவாசிகள் ஊழியர்களை வீட்டிற்கு அழைப்பதில்லை.

ஊழியர்கள் விசுவாசிகளை அல்லது விசுவாசிகள் ஊழியர்களை சார்ந்து வாழுகின்ற மனநிலை மாறவேண்டும், எப்பொழுதும் தேவனை சார்ந்து இருங்கள், அவரை மாத்திரம் நம்ப வேண்டும் {சங்கீதம்:118:8}

நாம் நூறு சதவீதம் 100% தேவனில் மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

மத்தேயு:10:8,10 “8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.”

10 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.”

கிருபையினாலே இரட்சிக்கபட்டிருக்கிறோம், கிருபையினால் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆகவே நாம் இலவசமாக பெற்றதை வியபார பொருளாக மாற்றக்கூடாது. நாம் இலவமாக பெற்றதை இலவசமாக தான் கொடுக்க வேண்டும்.

ஊழியம் என்பது வியாபாரம் அல்ல, தேவன் அவர்களைப்போஷிப்பார். தேவன் அவர்களைக் கைவிடமாட்டார்.

நாம் விதைத்தை நிச்சயமாக அறுப்போம் என்று விசுவாசிக்க வேண்டும். ஏனென்றால் நம்முடைய பொக்கிஷங்கள் பரலோகத்திலே சேர்த்து வைக்கபட்டுக் கொண்டு இருக்கிறது.

உங்கள் வாழ்கையிலே அவசரமாக சில தீர்மானங்களை எடுத்துவிட்டு இழப்புக்களை சந்திப்பதைவிட, ஆவியானவரிடம் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டால் அவர் நம்மை சரியான வழியில் நடத்துவார்.

வேலையால் தன் ஆகாரத்துக்கு பாத்திரவானாய் இருக்கிறான். நிச்சயமாய் தேவன் அவர்களை போஷிப்பார்.

மத்தேயு:20:4,8,12 “4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.

8 சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.

12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி  நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின்  கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும்  சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே  என்று முறுமுறுத்தார்கள்.

13 அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக:  சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச்  சம்மதிக்கவில்லையா?

14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.

15 என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு  அதிகாரமில்லையா? நான்  தயாளனாயிருக்கிறபடியால்,  நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.

இயேசு நியாயமான கூலி கொடுப்பவர்.

ஒரு ஆலயம் விசாலமடைகிறது, பெருகுகிறது என்றால், அந்த சபையின் விசுவாசிகளும் சபையின் ஊழியர்களும் விசுவாசிக்கிறார்கள். விசுவாசிக்கிறதினால் அவர்கள் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

ஊழியக்காரர்களாய் இருக்கிறவர்கள் மற்ற சபைகளைப் பார்த்து, மற்ற ஊழியர்களைப் பார்த்து பொறாமைக் கொள்ளக்கூடாது. நமக்குறிய கூலியை தேவன் தருவார்.

தீத்து:1:7 “ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,”

1தீமோத்தேயு:6:5 “5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.”

பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் எந்த காலத்திலும் சபைக்கு வராதீர்கள். பணத்தை நோக்கமாய் வைத்து சபைக்கு வருகிறவர்களுக்கு சத்தியம் உள்ளே போகாது.

1தீமோத்தேயு:6:6 “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.”

விசுவாசிகள் இரட்சிக்கப்பட வேண்டும், மனம் திரும்பவேண்டும் என்று ஜெபத்துடேனே ஊழியம் செய்யாவிட்டால் அது ஊழியமல்ல.

ஊழியம் செய்யும்போது உத்தமமுள்ள இருதயத்தோடும், உற்சாகமுள்ள மனதோடும் செய்ய வேண்டும்.

ஊழியம் என்பது ஆதாய தொழில் அல்ல.

1தீமோத்தேயு:6:17 “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,”

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுப்பீர்களே. அன்பை விதைத்தால் அன்பையே அறுப்பீர்கள். விதைக்காமல் அறுப்பைக்காண முடியாது.

குடும்பத்தை சரியாக பார்த்துக்கொள்ளாத எந்த ஊழியாக்களால் அவர்களின் ஊழியத்தை சரியாக செய்ய முடியாது.

விசுவாசத்தோடுப் பேசிக்கொண்டு இருங்கள். நிச்சயமாய் காரியம் வாய்க்கும். தேவன் அவர் சொல்லியப்படி செய்வார்.

ஆமென்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *