Categories
Sunday Sermon {Tamil}

3G Church Sunday Message {16.05.2021} [தமிழ்]

போதகர்: டேவிட் டி பாஸ்கரன்

https://3gchurch.cw.center/wp-content/uploads/sites/11804/2021/05/3G-Church-Sunday-Sermon-16.05.2021.mp3

1பேதுரு:4:7எல்லாவற்றிற்க்கும் முடிவு சமீபமாயிற்று

எப்போது இந்த கொரோனா முடியும் என்று இருக்கிறீர்களா? எப்போது இந்த குறைவுகள், பற்றாக்குறைவுகள் எல்லாம் நீங்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா? எப்போது முடிவு வரும் என்று நினைக்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று.

“ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிறதயாயிருங்கள்.”

இந்த கொரோனா பிரச்சனைகளெல்லாம் முடிந்து நாம் இயல்புக்கு திரும்பவேண்டுமென்றால் ஜெபிப்பதில் கவனமாயிருக்க வேண்டும். ஆகவே நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

  • எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாய் இருக்கிறது.
  • தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள்.
  • ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையாயிங்கள்.

இந்த 3 மூன்று காரியத்தை அப்போஸ்தலனாகிய பேதுரு இங்கே வளியுறுத்தி சொல்லுகிறார்.

1பேதுரு:4:1இப்படியிருக்க கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாய் தரித்துக்கொள்ளுங்கள்.”

யுத்தத்திற்கான ஆயுதம் – இயேசு மாம்சத்தில் பாடுப்பட்டார் என்பதை மறக்க கூடாது. ஏனென்றால் அவர் மாம்சத்தில் பாடுபட்டது நம்முடைய நோய்களை தீர்க்ககூடிய பலியாக. நம்முடைய சாபங்களையும், நோய்களையும் தீர்க்க கூடிய மருந்தாக மாறுவதற்க்காக இவையெல்லாம் செய்தார்.

1பேதுரு:4:19 ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.

பாடுகளையும், உபத்திரவங்களையும் மற்றவர்களுடைய தாக்குதலையும் அனுபவிக்க வேண்டுமென்று என்று சொன்னால், அது தேவனுடைய சித்தத்தின்படி என்று சொன்னால்; தேவனுடைய சித்தத்தின்படி தான் பாடனுபவிக்க வேண்டும்.

எரேமியா:29:11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”

அழிவின் சக்திகளிடத்திலிருந்து தேவன் நம்மை காக்கின்றார்; அவர் நம்மை காக்கிறபடியால், நாம் நிர்மூலமாவதுமில்லை, நிர்மூலமாகப்போவதும் இல்லை.

நீதிமொழிகள்:23:18 “நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.”

நாள்தோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தில் இருங்கள்.கர்த்தரை நம்பி, அவரில் சார்ந்திருங்கள். உங்களை சுற்றியிருக்கிற சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாதிருங்கள். ஏனென்றால் அவர் எந்த சூழ்நிலையிலிருந்தும் நம்மை காக்க வல்லவராய் இருக்கிறார்.

நம் வாழ்க்கையில் எப்படிப்பட்ட முடிவு வருமென்று நம்பிக்கொண்டு இருக்கிறோமோ, அது வீணாகாது.

பிலிப்பியர்:1:20நாம் ஒன்றிலும் வெட்க்கப்பட்டு போகாமல், எப்போழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனலாகிலும் சாவினாலாகிலும் கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்றும் எனக்குண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.

இன்று நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் உங்களை தூக்கி நிறுத்த ஒரு தேவன் இருக்கிறார். நம்மை உயிர்ப்பிக்க அவர் வல்லவராயிருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் நம்மை நிச்சயமாக கைவிடமாட்டார். நம்முடைய சூழ்நிலைகள் வெட்க்கத்திற்கு அல்ல வெற்றிக்கே!

2சாமுவேல்:22:18 “என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.”

நம்மை தொடர்ந்து வருகிற போராடுகிறவர்கள் பெரியவர்களாய் இருந்தாலும் நாம் யாரை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறோமோ அவர் பெரியவராய் இருக்கிறபடியால் இவைகளை எல்லாவற்றையும் விட பெலமுள்ளவராயிருக்கிறார், அவர் நம்மை இரட்சிப்பார். அவர்களின் கையில் நம்மை ஒப்புக்கொடுப்பதில்லை.

ஆகவே, நாம் யாரை பின்தொடருகிறோம் என்பதில் கவனமாயிருக்க வேண்டும். நாம் பின்தொடர்கிறது கர்த்தராய் இருந்தால் நிச்சயமாக நம்மை இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார்.

2சாமுவேல்:22:19என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.”

சங்கீதம்:77:6-7 “இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

7 – ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?

எப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் வருகிறதோ, பிரச்சனைகளுடன் சேர்ந்து குழப்பங்களும் வருகிறது. நம்முடைய நம்பிக்கைகளை அசைக்கக்கூடிய குழப்பங்களையும் கொண்டு வருகிறது.

பேதுரு பிரச்சனைகளை பார்க்காதவரை தண்ணீரின் மேல் நடந்தார், ஆனால் அவரை சுற்றிலுமிருந்த காற்றையும், கடலையும், அந்த கொந்தளிப்பையும் பார்க்க ஆரம்பித்தாரோ அப்பொழுது அவர் அதே தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார். எது பிரச்சனையாய் இருந்ததோ அந்த பிரச்சனையின் மேல் நடந்து கொண்டிருந்தவர் அதே பிரச்சனையில் மூழ்கி போகிறார்.

பிரச்சனைகளை பார்க்கிற மனிதன் பிரச்சனையின் மீது நடக்கமாட்டான், பிரச்சனைகளைப் பார்த்து எதிர்த்து நிற்க்கிறவன் அதை முன்னேறி நடக்கிறவன் நிச்சயமாய் வெற்றியாய் நடக்க முடியும்.

இப்பொழுது கடல் மீது நடக்கின்ற பேதுரு கடல் கொந்தளிக்கிறது என்று பார்க்கவில்லை, கடவுள் கூட இருக்கிறார் என்று பார்கிறார்.

பயம் வந்தால் விசுவாசம் செயல்படாது. நம்முடைய பயம் நம்மை பிரச்சனையில் மூழ்க செய்கிறது, விசுவாசம் அந்த பிரச்சனைகள் மேல் நடக்கவும், ஜெயிக்கவும் செய்கிறது.

நாம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் தேவன் நம்மோடு கூட தான் இருக்கிறார்.

சங்கீதம் :77:8 “அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?”

வாக்குத்தத்தத்தம் நமக்கு நிறைவேற எந்த காரணமும், எந்த காரியமும் தடையாயிருக்க போவதில்லை, நாம் வாக்குத்தத்தங்களை சுதந்தரித்து கொள்வோம்.

2கொரிந்தியர்:1:20 “எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.”

சங்கீதம்:77:9-10 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன்.

10 – அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.”

கர்த்தர் தம்முடைய கரத்தில் நம்முடைய வாழ்கையை வைத்திருக்கிறார். ஆகவே ஒன்றும் உங்களுக்கு குறைவுபடாது. தேவைகளும், வியாதிகளும், பிரச்சனைகளும் நம்மை நெருக்கினாலும் தேவன் நம்மை காக்கிறவராய் இருக்கிறார்.

ரோமர்:8:28 “சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”

கர்த்தர் நம் நம்பிக்கைகும் வாஞ்சைக்கு தக்கதாய் முடியப்பன்னுவார்!

மாற்றங்களை கொடுக்கிற தேவனாலே பெரிய மாற்றங்களை நிச்சயமாய் செய்ய முடியும்.

யோவான்:19:30 “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.”

இயேசு சிலுவையில் முடித்ததை நாம் அனுபவிக்க வேண்டும்.

லூக்கா:10:18-19 “18 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.

19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.”

ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது. ஏனென்றால் நம்முடைய தேவன் எந்த நிலையிலும் நம்மை காக்க வல்லவர்.

1 யேவான்:4:4 “பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாய் இருக்கிறது.தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள்.ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையாயிங்கள்.

ஆமென்,..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *