Watch Live!
போதகர்:டேவிட் டி பாஸ்கரன்
2 நாளாகமம்:13:12 “இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்;”
யாரெல்லாம் நம்மோடுக்கூட இருக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல, மனிதர்கள் எல்லாரும் நம்மை சுற்றி கூட இருந்தாலும், பெரிய பாதுகாப்பு கிடையாது. பாதுகாப்பில்லாத உலகம், பாதுகாப்பில்லாத சூழல், ஆனால் கர்த்தர் நமக்கு சேனாதிபதியாக, தலைவராக, நம்மை முன்நடத்தி செல்லுகிறவராக, நமக்கு முன்செல்லுகிறவராக, நமக்காக யுத்தத்தை நடத்துகிறவராக, நமக்கு தீங்கு அனுகாதபடி நமக்கு கேடகமாயிருந்து காப்பவராக இந்த மாதத்திலே கர்த்தர் சொல்லுகிறார்:
“நமக்கு முன்பாக அவர் கேடகத்தை பிடித்து நம்மை தீங்குகள் அனுகாதபடிக்கு நமக்கு முன்நடத்தி செல்லுகிறவராக ஒரு சேனாதிபதியாக நம்மை முன்நடத்தப் போகிறார்.”
கர்த்தர் நம்மோடுக்கூட இருக்கிறார், அவர் நமக்கு சேனாதிபதியாக இருக்கிறார்.
கர்த்தர் ஒருப்போதும் தவறு செய்கிறவர் அல்ல. இந்த பொல்லாத காலத்திலும் இன்றைக்கு உங்களையும், என்னையும் உயிரோடு வைத்திருக்கிறது தேவ கிருபை. நாம் நிர்மூலமாகவில்லை, ஆகவே நாம் உயிருள்ளவரை ஆராதித்துக்கொண்டு இருக்கிறோம்.
கர்த்தருடைய வார்தை சொல்லுகிறது: “சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக”. மரித்தவர்கள் துதிப்பதில்லையே. ஆனால் கிஸ்துவுக்குள் இருக்கிற நமக்கோ “உயிரோடு இருக்கும்போதும் துதித்துக் கொண்டு இருக்கிறோம், மரித்தாலும் அவரோடுக்கூட இருந்து அவரை துதித்துக் கொண்டு அவரை ஆராதித்துக்கொண்டு அவரோடு வாழப்போகிறோம்.”
இந்த உலகம் சொல்லுகிறது “மரணத்திற்குப்பின் நம்பிக்கை இல்லையென்று”. ஆனால் கிறிஸ்து சொல்லுகிறார்: மரணத்திற்குப்பின்னும் ஒரு பெரிய வாழ்கை இருக்கிறது, ஆயிரமாயிரம் வருஷமாய் அவரோடுக்கூட வாழப்போகிறோம், அரசாளப்போகிறோம்.
வேதம் சொல்லுகிறது: இம்மைக்காக மட்டுமே நீங்கள் தேவனை தேடுகிறவர்களாக இருந்தால் உங்களைப்போல பரிதபிக்கதக்கவன் யாருமில்லை
மனிதர்களை சார்ந்து கொண்டு, மனிதர்களை ஆதாரமாய் கொண்டு, மனிதனுக்காக வாழுகிறது தான் நம்முடைய பெலவீனம், அதனால் தான் பரிதாபம் வருகிறது.
கர்த்தருக்காக வாழுகிறவர்கள் பாக்கியவான்கள். நாம் கர்த்தருக்காக வாழ்கிறோம் அதனால் தான் நாம் பாதுகாப்பாய் இருக்கிறோம்.
சேனாதிபதி – ஒரு பெரிய படையை முன்நடத்தி செல்லுகிறவர், ஒரு தேசத்தை காக்க யுத்தத்தை முன்நின்று நடத்தி வெற்றியை உறுதிபடுத்துகிறவர் தான் சேனாதிபதி.
நம்முடைய வாழ்கையில் வெற்றியை உறுதிப்படுத்த நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்காக நமக்கு முன்பாக செல்லுகிறார். ஒரு படையை நடத்தி செல்லுகிற தலைவனைப்போல நம்முடைய வாழ்கையிலே நமக்கு தீங்கு நேரிடாதபடிக்கு, தேசத்திற்கு தீங்கு நேரிடாதபடிக்கு, குடும்பங்களுக்கு தீங்கு நேரிடாதபடிக்கு, கர்த்தர் காக்கும்படி நமக்கு முன்பாக சேனாதிபதியாக அவர் சென்றுக்கொண்டிருக்கிறார்.
ஆகவே நம்முடைய வாழ்கையில் தேவன் சேனாதிபதி என்றால், அவர் தலைவர் என்றால், அவர் யுத்தத்தை முன்நின்று நடத்துகிறவர் என்றால், ஒரு காலத்திலும் தேவன் தோற்றதில்லை. தேவன் தோற்கவில்லை என்றால் நாமும் தோற்றுப்போவதில்லை.
கர்த்தர் யுத்தத்தை நடத்தினால் அந்த யுத்ததில் [100%] நூறு சதவீதம் வெற்றி நமக்கே. ஆகவே சூழ்நிலைகளைக்கண்டு பயப்பட வேண்டாம், சோர்ந்துவிட வேண்டாம், கர்த்தர் தாமே நமக்கு முன்பாக போகிறவர், அவர் நம்மோடுக்கூட இருக்கிறார். நம்மை விட்டு அவர் விலகுவதுமில்லை, நம்மை கைவிடுவதுமில்லை.
அவர் நம்முடைய மேய்பர், நம்மை முன்நின்று நடத்துகிறவர். நம்மை வழிநடத்தி செல்லுகிறவர்.
கர்த்தர் நமக்கு ஒரு நல்ல சேனாதிபதியாக, நம்மை காக்கவும், நம்மை தப்புவிக்கவும், நமக்கு முன் நடக்கிறவராக தேவன் நம்மோடுக்கூட இருக்கிறார். ஆகவே வெற்றிகரமாய் முன்னேறுவோம். தேவன் நம்மைக் கொண்டு செய்ய விரும்பினதையெல்லாம் செய்து முடிக்கும் மட்டும் அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை நம்மை கைவிடுவதுமில்லை.
2 நாளாகமம்:13:1 “ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,”
தேசத்தை ஆளுகிறவர்கள் தேசத்தின் குடிகளை கர்த்தரை அறிகிற அறிவில் நடத்தாமல் போனால், அந்த தேசம் பாழாய் போகும்.
தாவீதின் காலத்தில் தேசம் சமாதனமாய் இருந்தது, சாலொமோன் காலத்தில் சாலொமோன் தன்னுடைய தேவனாகிய கர்த்தரை தேடாமல் இருந்து சிதறிப்போனப்படியால் அவருக்கு பின்பாக இராஜ்ய பாரம் 12 கோத்திரத்திற்கும் தலைவனாயிருந்த நிலமை மாறிற்று.
தேசத்தை உத்தமமாய் நடத்தகூடியவர்களாய் நீங்கள் இருந்தால், கர்த்தர் உங்கள் வாழ்கையின் ஆளுகையில் உங்களையும், உங்கள் தலைமுறைகளையும், தலைமுறையின் தலைமுறையையும் ஆளும்படி வைப்பார். சந்ததி சந்ததியாய் வெற்றியான மக்களாய் வாழவிரும்பினால் தேவனுக்கு பயப்படும் பயத்தை குடும்பத்திலிருக்கிறதா என்பதில் கவனாமாயிருக்க வேண்டும்.
2 நாளாகமம்:13:8-9 “இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன்கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கினபொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.
9 நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.”
கர்த்தர் நியமித்த முறமைகளை நிர்மூலமாக்கி, தேவ ஆலோசனையை அபத்தமாக்கி, தங்கள் மனதிற்கு தோன்றினதெல்லாம் சரியென்று செய்தால் எல்லாமே நாசமாய் போய்விடும்.
2 நாளாகமம்:13:10 “எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.”
யுத்தம் எப்படிப்பட்பது என்பது முக்கியமல்ல, யுத்தத்தை முன்நின்று நடத்துகிறவர் யார் என்பது தான் முக்கியம். ஆகவே நாம் நிச்சயாமாக வெற்றிபெறுவோம்.
நம்முடைய வாழ்கையில் யார் நம்மை நடத்துகிறார் என்பது தான் முக்கியம்.
கர்த்தர் எல்லாவற்றையும் மாற்றி அமைப்பார்.
இந்த மாதம் முழுவதும் கர்த்தரே நமக்கு சேனாதிபதியாக நமக்கு முன் நின்று நடத்துவாராக.
ஆமென்…