Categories
Sunday Sermon {Tamil}

3G Church Sunday Message {23.05.2021}[தமிழ்]

போதகர் டேவிட் டி பாஸ்கரன்

https://3gchurch.cw.center/wp-content/uploads/sites/11804/2021/05/3G-Church-Sunday-Sermon-23.05.2021-Trimmed.mp3

1பேதுரு:4:7 “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.”

எப்படிப்பட்ட சூழ்நிலையாய் இருந்தாலும் தேவனுடைய ஆவியானவர் நம்மோடு கூட இருக்கிறார். ஓடி ஒளிந்துக்கொண்டுருக்கிற எல்லா சூழ்நிலைக்கும் முடிவு சமீீபமாய் இருக்கிறது. நீங்கள் பயந்துக்கொண்டிருக்கிற எல்லா சூழ்நிலைகளுக்கும் முடிவு சமீபமாயருக்கிறது.

நம் வாழ்விலே நல்ல முடிவை கொண்டு வருவதற்கு ஜெபத்திலே தரித்திருக்க வேண்டும்.

பிலிப்பியர்:1:20 “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.”

விசுவாசிக்கிறவன் எப்போதும் வெட்கபட்டுப்போவதில்லை.

நம்முடைய தேவன் நமக்கு பிரச்சனைகளை வர விடாமலும் காக்கிறார், பிரச்சனைகள் வந்தாலும் காக்கிறார். நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறபடியால் வாழ்விலானாலும் சாவிலானாலும் அவர் நம்முடைய சரீரத்தில் மகிமைப்படுவார்.

பிரச்சனைகள் நம்முடைய வாழ்வில் வரும்போது பயத்தையும், குழப்பங்களையும் கொண்டுவருகிறது. பயம் வேதனையையும், மனவலியையும் கொண்டுவருகிறது, அனேக சமயத்திலே கர்த்தரிடத்தில் கேள்விகேட்க வைக்கிறது.

தெளிந்தப்புத்தி இல்லாவிட்டால் விசுவாசம் செயல்படாது. சூழ்நிலைகளை பார்க்கிலும் நம்முடைய தேவன் பெரியவராயிருக்கிறார். காக்கைகளை போஷிக்கிற தேவன் எந்த சூழ்நிலையிலும் நம்மையும் போஷிக்க வல்லவராய் இருக்கிறார்.

நம்முடைய பற்றாக்குறைகள் எல்லாவற்றையும் நிச்சயமாய் நம்முடைய தேவன் நிறைவாக்குவார்.

நம்முடைய சூழ்நிலைகளைப் பார்த்து எப்போதும் குழம்பக்கூடாது, குழம்புகிற சூழ்நிலைகளிலும் நாம் விசுவாசமுள்ளவர்களாய் தேவனிடத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

  • கர்த்தர் என்னை நேசிக்கிறார்.
  • தேவன் நம் வாழ்கையில் என்றும் ஆளுகை செய்கிறார்.
  • இயேசு சிலுவையில் நமக்காக முடித்ததை நாம் அனுபவிக்கிறோம்.
  • தேவன் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் ஆகவே ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது.

இந்த 4 விஷயத்தில் நாம் எப்போதும் குழம்பக் கூடாது.

நீங்கள் ஜெபம்பண்ணும்போது பயத்தோடு அல்ல விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். பயம் நம்முடைய விசுவாசத்தின் எல்லைகளை தகர்த்துவிடும், ஆகவே விசுவாசத்தோடு ஜெபம் பண்ணும்போது வெற்றியாக முடியும்.

பிலிப்பியர்:1:19 “அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.”

நாம் ஜெபித்தால் தேவன் எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்துவார்.

நாம் ஜெபம் பண்ணினால் நம்முடைய ஜெபத்தினாலும், பரிசுத்த ஆவியின் உதவியினாலும் தேசத்திற்கும் நமக்கும் இரட்சிப்பாக முடியும், ஆசீர்வாதமாக முடியும்.

எந்த ஒரு விஷயத்தில் நமக்கு முடிவு இரட்சிப்பாக இருக்க வேண்டுமோ அந்த விஷயத்தைக் குறித்து தேவனிடத்திடத்தில் ஜெபத்தின் மூலம் பேச வேண்டும்.

தேவன் நம்மை முக்கியத்துவப்படுத்துகிறார். தேவன் நம் மூலமாக இந்த பூமியை ஆள விரும்புகிறார். நாம் ஆளும்போது கிறிஸ்து நமக்குள் இருக்கிறார், ஆகவே நாம் ஆளும்போது அவர் என்னோடுக்கூட ஆளுகிறார். அவர் எனக்குள் வாழுகிறபடியால் நாம் ஆளும்போது நம்மோடுக்கூட அவரும் ஆளுகிறார்.

நாம் ஜெபம்பண்ணும்போது தேவனை நம்முடைய பிரச்சனையில் தலையிட அவருக்கு அனுமதிக்கொடுக்கிறோம். நம்மால் சரிசெய்ய முடியாத பிரச்சனையை அவர் நம்மைக் கொண்டே சரிசெய்வார்.

எஸ்தர்:4:3-4 “ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.

4 அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.”

எஸ்தர்:4:12-14 “எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.”

உங்களை சுற்றியிருக்கிற எல்லாரும் கைவிட்டாலும் கர்த்தர் கைவிடமாட்டார்.

உங்களுக்கு இன்று கிடைத்திருக்கிற கிருபை எல்லாருக்கும் உதவி செய்வதற்காக கிடைத்திருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற ஸ்தானத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் அது கர்த்தருடைய பார்வைக்கு சரியானது அல்ல. கர்த்தர் உங்களுக்கு ஸ்தாபித்த ஸ்தானத்திலே உண்மையாய், உத்தமமாய் இருங்கள், கர்த்தர் அதிலே பிரியப்படுவார்.

எஸ்தர்:9:1-4 “ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

2 யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

3 நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

4 மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.”

நீங்கள் மற்றவர்களை சரியான விதத்திலே நடத்தி, சரியான பாதையைக் காட்டி, ‘இந்த காலத்தில் நீங்கள் மௌனமாக இருக்கக் கூடாது’ என்று சொல்லி அவர்களை திடப்படுத்தி அவர்களை சரியாய் நடத்தி செல்வீர்கள் என்றால் பெரிய ஆசீர்வாதத்தின் வாய்காலக அவர்கள் இருப்பார்கள்.

எல்லா காரியங்களும் மாறுதலாய் முடியும்! எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் மாற்றங்களைக் கட்டளையிடுவார். காரியம் மாறுதலாய் முடிந்தது.

தடையில்லாமல் கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பதற்கு, தேவனைத் தொழுதுகொள்வதற்கு, வாசல்களை தேவன் திறந்து வைத்திருக்கிறார். இதுவரைக்கும் நாம் இழந்துப்போன இரட்சிப்புக்கேதுவான சுவிஷேசத்தை அறிவிக்க இருந்த அத்தனை தடைகளையும் தேவன் உடைத்து, சாதகமான சூழலையும், சாதகமான வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

இந்த காலத்தில் சுவிஷேசத்தை அறிவிக்க நாம் மௌனமாயிருந்தால், இந்த காலத்தில் ஜெபிப்பதற்கு நாம் மௌனமாக இருந்தால், இரட்சிப்பும் சகாயமும் வேறொரு இடத்திலுருந்து வரும்.

நெகேமியா:6:9 “அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,”

எத்தனை போரட்டங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் செய்வதற்கு கர்த்தர் கிருபை தருவார்.

உங்களால் முடியாது என்ற காரியத்தையெல்லாம் ஜெபத்தின் மூலம் தேவனிடத்தில் தெரியப்படுத்துங்கள். கர்த்தர் நம்முடைய கரங்களையும், இருதயத்தையும் திடப்படுத்துவார்.

நெகேமியா:6:14 “என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.”

உங்களுக்கு விரோதமாய் ஒருவர் போரடினால் அவர்களை சபிக்கவேண்டாம், உங்களுடைய வாழ்கையிலே தேவ நோக்கத்திற்காக வரும்போது “ஆண்டவரே இவர்களெல்லாம் இப்படி செய்தாலும் நீர் என்னை கைவிடமாட்டீர், நீர் என்னோடு கூட இருக்கிறீர், நீர் செய்ய நினைத்தவைகளையெல்லாம் செய்து முடிக்கும் மட்டும் என்னோடு கூட நீர் இருந்து காரியங்களை நடப்பிப்பீர் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று விசுவாசித்து அறிக்கையிட வேண்டும்.

நெகேமியா:6:15 “அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.”

எவ்வளவு சாவால்கள் இருந்தலும் அவர்கள் அந்த அலங்கத்தை கட்டிமுடித்தார்கள். அதேப்போல நாமும் எவ்வளவு சவால்கள் இருந்தாலும் நாம் செய்யமுடிக்க வேண்டியதை செய்வோம் என்று விசுவாசிக்க வேண்டும்.

உங்களுடைய வாழ்கையில் எதை அடைய வேண்டுமோ அதன்மேல் கவனமாயிருங்கள். சவால்கள் இருக்கும், பிரச்சனைகள் வரும், எதிராளிகள் இருப்பார்கள், ஆனாலும் நீீீீங்கள் அடைய விரும்புகிறதை தேவன் உங்களை அடைய வைப்பார்.

விசுவாசத்தோடே காத்திருங்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் காரியங்களை செய்து முடிக்கும்படி உங்கள் கைகளை திடப்படுத்துவார்.

உங்கள் உயர்வை எந்த சக்தியும், எந்ததனை மக்களும் தடுக்க முடியாது. நீங்கள் வாழும் ஆசீர்வாதமான ஸ்தானத்திற்கு போவதற்கு விரோதமாய் ஆயிரம் பிசாசுகள் வேலைசெய்தாலும், ஒன்றும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால், நீங்கள் கர்த்தர் நிறுத்த வேண்டும் என்று வைத்திருக்கிற ஸ்தானத்திற்கு நேராக முன்னேறி கொண்டு இருக்கிறீர்கள்.

ஆகவே பயத்தோடும் திகிலோடும் இருக்காதீர்கள், அடையப்போகிற இடத்தை நோக்கி பாருங்கள். நம்மை உயர்துகிறவர் தேவன்.

நம் தேவன் நிச்சயமாய் உங்களை உயர்த்துவார், அவர் உங்களைக் கைவிடப்போவதில்லை.

நாம் சரியான இடத்திலிருக்கிறோம் ஆகவே நாம் தோற்றுப்போவதில்லை.

ஆதியாகமம்:37:19-20 “ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,

நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.”

உங்களுக்கு கொடுக்கப்பட்ட தரிசனங்களும், வாக்குத்தத்தங்களும், வெளிப்பாடுகளும் பரியாசத்துக்குரியவைகளாக இருந்தாலும் கர்த்தர் உங்களோடுக் கூட இருக்கிறார்.

ஆதியாகமம்:50:19-20 “யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;

20 நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.”

தேவன் நமக்கு ஆசீர்வாதமான முடிவைத் தருவார்.

ஆமென்,..

3 replies on “3G Church Sunday Message {23.05.2021}[தமிழ்]”

Thank You for reading, Hope all these contents will help you to grow spiritually,
Thank You.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *