போதகர்: டேவிட் டி பாஸ்கரன்
தேவனுடையப் பிரசன்னம் நம்மோடுக்கூட இருக்கும்.
1 நாளாகமம்:28:20 “தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.”
நம்மிடத்தில் என்ன இருக்கிறது என்ற அடிப்படையில் அல்ல, யார் நம்மோடுக்கூட இருக்கிறார் என்பதை வைத்துத்தான் நம்முடைய வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
கர்த்தர் நம்முடைய கரத்திலே ஒரு காரியத்தைக் கொடுத்தால் அந்த காரியத்தை செய்து முடிக்கும் மட்டும் தேவனாகிய கர்த்தர் நம்மோடுக் கூட இருக்க வேண்டும், அவர் இருந்தால் நாம் எல்லாவற்றையும் வெற்றியாய் செய்து முடிப்போம், அவர் நம்மை விட்டு விலகமாட்டார், நம்மை கைவிடவும் மாட்டார்.
1நாளாகமம்:29:2-4 “நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.
3 இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.
4 அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும்வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.”
நம்மிடத்தில் என்ன இருக்கிறத் என்பது முக்கியம் அல்ல, நம்மோடு யார் இருக்கிறார் என்பது தான் முக்கியம். கர்த்தர் நம்மோடு இருந்தால் நம்மிடத்தில் எவ்வளவு ஆஸ்தி இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு பேர் நம்மோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கர்த்தர் நம்மோடுக்கூட இருப்பதால் எல்லாவற்றையும் நாம் செய்து முடிப்பேன்.
நம்மிடத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் நம்மாலே நிச்சயமாய் நம்முடைய வாழ்கையிலே சாதிக்க முடியும்.
தேவனுடைய பிரசன்னம் நம்மோடுக் கூட இருக்க வேண்டும். தேவனுடைய பிரசன்னம் இல்லாவிட்டால் எவ்வளவு பணம் இருந்தாலும் பிரயோஜனமில்லை.
“மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்தாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமில்லை” எது நம்முடைய பார்வைக்கு லாபமாக தோன்றுகிறதோ அது கர்த்தருடையப் பார்வைக்கு லாபமானது அல்ல.
பணம் வந்தால் மனிதர்கள் தங்கள் ஸ்தானத்தை மறந்துவிடுவார்கள், அதனால் தான் பணம் வந்தால் மனிதர்கள் கெட்டுப்போகிறார்கள்.
யாத்திராகமம்:33:16 “எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.”
உபாகமம்:7:7,14 “சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.
14 சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை.”
நாம் தேவனுக்கு விசேஷித்தவர்கள் என்று நமக்கு தெறியும். நாம் தேவனுக்கு விசேஷித்தவர்கள் என்று மற்றவர்கள் அறிவார்கள்? கர்த்தர் நம் கூட இருக்க வேண்டும் என்ற எண்ணம், கர்த்தர் நம்மோடு இருப்பதை உறுதி செய்யக் கூடிய ஆவி, கர்த்தரோடு நடக்க கூடிய மனோவலிமை இவையெல்லாம் நம்மோடுக்கூட எப்போதும் இருந்தால் நாம் எல்லாவற்றிலும் வெற்றியாக வாழ முடியும்.
கர்த்தரோடு நடப்பது என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.
யாத்திராகமம்:33:1-3 “கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டுவந்த ஜனங்களும், இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.
2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
3 ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.”
நமக்கு முன்பாக தேவன் தம்முடைய தூதனை அனுப்பவில்லை, அவர் நமக்காக தம்முடைய சொந்த குமாரனை அனுப்புகிறார்.
தேவன் நம்மோடு இருப்பது தான் தேவனுடைய பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் காட்டுகிறது.
மோசே எவ்வளவு பெரிய ஜனங்களை நடத்தினாலும், “தேவன் அவரோடு வரவில்லை என்றால் நாம் விசேஷித்தவர்களாய் இருக்க முடியாது, அதனால் தேவன் அவரோடு வர வேண்டும்” என விரும்புகிறார்.
தேவன் நம்மோடு இருக்க வேண்டும், தேவனுடைய பிரசன்னம் நம்மோடுக்கூட இருக்க வேண்டும், தேவன் நம்மை நடத்துகிறவராய் இருந்தால் நம்முடைய வாழ்கையின் எல்லா எல்லைகளும் வெற்றியாய் இருக்கும்.
வாழ்கையின் திருப்தி – தேவன் நம்மோடுக்கூட இருப்பது.
தேவன் நம்மோடுக்கூட இருப்பதினால் மட்டும் தான் வாழ்கையில் திருப்தி இருக்கும்.
நாம் பட்டினியிலும், பசியிலும் இருந்தாலும் கிறிஸ்து நமக்குள் பெலனாயிருக்கிறார், ஆகவே நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் நாம் சந்தோஷமாய் இருப்போம்.
உபாகமம்:25:19 “உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும்தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.”
பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருக்கும் போது மட்டும் தான் இளைப்பாறுதல், திருப்தி, சமாதனம் இருக்கும். அவர் நம்மோடு இல்லாவிட்டால் நாம் என்ன செய்தாலும் நம்முடைய வாழ்கையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது.
பிரசங்கி:7:27-28 “காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்.”
28 “என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.”
29 “இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.”
நம்முடைய வாழ்கையில் எத்தனைப்பேர் நம்மோடுக்கூட இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, கர்த்தர் நம்மோடுக்கூட இருக்கிறார் என்பது தான் முக்கியம். கர்த்தரை அறிகிற அறிவில் நிலைத்து இருக்க வேண்டும்.
பிரசங்கி:9:2-4 “எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.
3 எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.
4 இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.”
செத்த சிங்கத்தைப் பார்க்கிலும், நீங்கள் உங்களை நாய் என்று நினைத்தாலும் பரவாயில்லை; இன்று நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், ஆகவே கர்த்தர் உங்களுக்கு ஒரு வாய்பை தருவார்.
கர்த்தர் நம்மை இன்றைக்கும் கிருபையாய் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். அவர் நம்மேல் பிரியம் கொண்டப்படியால் நம்மை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார். அவர் நம்மேல் வைத்திருக்கிற இரக்கத்தினாலே இன்றைக்கும் நாம் நிர்மூலமாகாதபடிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்.
நீதிமானுடைய மரணம் கர்த்தருடைய பார்வையில் அருமையாய் இருக்கிறது.
எல்லாருக்கும் நேரிடுகிறது தான் நீதிமான்களுக்கும் நேரிடுகிறது. ஆனாலும் எல்லாவற்றிலும் கர்த்தர் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார். அவர் நம்மோடுக்கூட இருக்கிறார் என்பதை காண்பிக்கிறார், அவர் நம்மை காப்பாற்றுகிறார். எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் சம்பவிக்கிறது, ஆனால் நாம் ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்திற்குள் போகிறோம், அவர்களோ அழிவுக்கு நேராக செல்லுகிறார்கள்.
பிரசங்கி:6:2 “அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.”
பிரசங்கி:5:15 “தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை.”
இந்த உலகத்தில் நாம் வாழும்போது தான் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற எல்லாவற்றையும் அனுபவிக்க முடியும். தேவனுடைய தயவும், பிரசன்னமும் இருந்தால் மட்டுமே நாம் அதை அனுபவிக்க முடியும்.
பிரசங்கி:6:3 “ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.
உங்களை சுற்றிலும் ஆயிரம் காரியங்கள் இருந்தாலும், கர்த்தருடைய காருன்யமும், கர்த்தருடைய தயவு இருந்தால் தான் நாம் வாழ முடியும்.
எவ்வளவு ஆஸ்தி, சொத்துக்கள், பிள்ளைகள் இருந்தாலும் அவர் நம்மோடு இல்லாவிட்டால் ஆஸ்தி, சொத்துக்களை, பிள்ளைகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
தேவனாகிய கர்த்தர் கூட இருக்க வேண்டும், ஏனென்றால் அவர் இருந்தால் தான் ஆசீர்வாதம். தேவனோடே உறவு இல்லாமல் போகிறவர்களுக்கு எல்லாம் மாயையாய் தான் இருக்கும்.
எப்போழுது கர்த்தர் நமக்கு கொடுத்து இருக்கிற தயவை அலட்சியமாய் பார்க்கிறோமோ, அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.
கர்த்தர் இதுமட்டும் நம்மை நிர்மூலமாகதபடி கிருபையாய் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
கர்த்தர் இல்லாத வாழ்கை இந்த உலகத்திலே எத்தனை கோடி ஆஸ்தியோடுக்கூட இருந்தாலும் அது பிரயோஜனமற்ற வாழ்க்கை.
பிரசங்கி:12:13-14 “காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.”
தேவனுக்கு பயந்து கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும். கர்த்தரைத் தேடுவதே நம்மேல் விழுந்த கடமை.
நன்மையாய் இருந்தாலும், தீமையாய் இருந்தாலும் தேவனுகடைய பிரசன்னத்திற்கு முன்பாக ஒரு நாள் நிற்க வேண்டும். அந்த நாளில் தேவன் நம்மை பார்த்து: “உண்மையும், உத்தமமுமான ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தாய், உன்னை அனேகத்தின் மேல் அதிகாரியாய் வைப்பேன்” என்று அவர் சொல்லுகிறதுப்போல நம்முடைய வாழ்கை இருக்க வேண்டுமே ஒழிய ஒரு குற்றவாளிகளைப்போல நிற்க கூடாது, அது தேவனுடைய பார்வையிலே சரியாகவும் இருக்காது.
எப்பொழுதெல்லாம் நாம் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் அவரால் நமக்கு உதவி செய்ய கூடாமல் போகிறது.
மரணம் நம்மை ஆளுகை செய்ய முடியாது, ஏனென்றால் இயேசு மரணத்தின் கூரை முறித்துவிட்டார். மரணத்தின் வல்லமை நம்மை மேற்கொள்ளாதபடி ஒவ்வொரு நாளும் நம்மை கர்த்தர் காப்பாற்றுவார்.
நீங்கள் சாக பயப்படவில்லை, விசுவாசத்தோடு வாழ விரும்புகிறீர்கள் என்றால் சுற்றிலும் இருக்கிற ஒரு வியாதியும் உங்களைத் தொடமுடியாது.
வாழ தீர்மானித்துவிட்டால் வாழவைக்கிறவர் தேவன்.
தேவனுடைய பிரசன்னம் நம்மோடுக்கூட இருக்கும்.
ஆமென்,..