Watch Live!
நேரலையில் காணுங்கள்!
சங்கீதம்:112:1-3 “1 – அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
2 – அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3-ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.”
ஆஸ்தியும், ஐசுவரியமும் நீதிமானிடத்தில் தங்கும்.
நாம் எங்கே இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தேவன் முன்குறித்து இருக்கிறார். அதன்படி நாமும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஆகவே அவர் நமக்கு கொடுத்த வாழ்கையிலே வெள்ளியும், பொன்னுமிருந்தாலும் அவர் நம்மோடுக்கூட இருக்க வேண்டும். அவர் நம்மோடு இருக்கும் போது நாம் செய்கிற எல்லாவற்றிலும் தேவன் நமக்கு வெற்றியாய் முடிப்பன்னுவார்.
பணத்தைக் குறித்த சரியான கண்ணோட்டமும் இருக்க வேண்டும், பணத்தைக் குறித்த சரியான கண்ணோட்டம் இல்லாவிட்டால் அதைனை பயன்படுத்தக்கூடிய விதங்கள் மாறிவிடும்.
யோபு தன்னிடம் இருந்த பொன்னையும் வெள்ளியையும் நம்பவில்லை, அவர் நம்முடைய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் மேல் சார்ந்து இருந்தார். [யோபு:31:24-28]
வேதம் சொல்லுகிறபடி: “பணம் எல்லாவற்றிற்கும் உதவும்”
நீங்கள் நீதிமான் என்று சொன்னால், ஆஸ்தியும், ஐசுவர்யமும் உங்கள் வீட்டிலே தங்கும்.
தேவனுடைய பிள்ளைகளிடத்தில் ஒன்றுமே இல்லாவிட்டாலும், அவர்களை உயர்த்துவது, ஆசீர்வதிப்பது தான் தேவனுடைய திட்டம்.
மத்தேயு:6:19-21 “19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.“
நாம் அதிக நேரம் எதிலே செலவிடுகிறோமோ அது நம்முடைய பொக்கிஷமாகிவிடுகிறது. நம்முடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே தான் நம்முடைய இருதயமும் இருக்கும்.
ஆலயம் உங்களுடைய பொக்கிஷமாய் இருக்க வேண்டும். ஆகவே, நாம் அதிக நேரம் அவருடைய சமுகத்தில் செலவிட வேண்டும்.
நம்முடைய பொக்கிஷங்கள் பூமியில் அல்ல, பரலோகத்திலே சேர்த்து வைக்க வேண்டும்.
தேவனுக்கு கொடுப்பதில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
“விதையில்லாமல் அறுக்க முடியாது” பூமியிலே உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் கொள்ளையிடப்படலாம். பணத்தினுடைய மதிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் குறைக்கப்படலாம். ஆனாலும் தேவனுடைய ஆசீர்வதமும் எப்பொழுதும் மாறாது.
தேவனை ஆராதிக்கிறவர்களுக்கு எப்பொழுதும் மதிப்பு குறைக்க படாது, எப்பொழுகதும் மதிப்பைக் கொடுக்ககூடியதாய் தான் இருக்கும்.
“இந்த சிறியவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்கிறீர்கள்” என்று இயேசு சொல்லுகிறார்.
நீங்கள் ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும், விதைவைகளுக்கும், இல்லாதவர்களுக்கும், தேவனுடைய இராஜ்யத்திற்காக செய்யும் ஒவ்வொரு உதவியும் உங்களுக்கு பரலோகத்திலே பொக்கிஷங்களாய் சேரும்.
நீங்கள் பரலோகத்தில் சேர்த்துவைக்க, வைக்க, உங்களுடைய பொக்கிஷங்கள் சேதமாக்கப்படாது. நீங்கள் ஒன்றுக்கும் குறைவுப்படாது. நாம் நஷ்டப்பட்டு போவதில்லை.
உங்கள் உள்ளத்திலே பணத்தைக் குறித்த சரியான கண்ணோட்டம் இருந்தால், நாம் கர்ததருக்காக, அவருடைய இராஜ்யத்திற்காக செலவளிப்போம்.
நல்ல மனிதன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு ஆஸ்திகளை சேர்த்து வைக்கிறான். கர்ததர் நம்மிடத்தில் கொடுத்திருக்கிற ஒவ்வொரு காசுக்கும் நாம் உத்திரவாதிகளாய் இருக்கிறோம்.
உங்கள் பொருளாதரத்தை, பணத்தை, உழைப்பை, நேரத்தை அதிகமாய் எதற்கு செலவிடுகிறீர்களோ அதுதான் உங்களுடைய பொக்கிஷமாய் இருக்கும்.
கண்ணானது சரீரத்தின் விளக்காய் இருக்கிறது. உங்களுடைய கண் தெளிவாய் இருந்தால் உங்களுடைய சரீரம் முழுவதும் வெளிச்சமாய் இருக்கும்.
உங்களுடைய கண் கெட்டதாய் இருந்தால் உங்கள் சரீரம் முழுவதும் இருளாய் இருக்கும்.பணம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தேவ ஆசீர்வாதம். உங்களுக்கு வரக்கூடிய வருமானம் 100% வருமானமும் அவரிடத்திலுருந்து தான் வருகிறது என்ற வெளிச்சம் இருந்தால், அந்த பணத்தைக் குறித்த நம்முடைய கண்ணோட்டம் சரியாக இருக்கும்.
நமக்குள் இருக்கிற தவறான கண்ணோட்டம் நமக்குள் இருக்கிற வெளிச்சத்தை இருளாய் மாற்றிவிடு்ம்.
ஏசாயா:60:1-2 “1 – எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2 – இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.”
இரண்டு எஜமான்களுக்கு யாராளும் வேலை செய்ய முடியாது. ஆகவே இரண்டு எஜமான்களையும் சந்தோஷப்படுத்தும் வேலையை செய்யாதீர்கள். ஒரு எஜமானுக்கு கீழ்படிந்தால் மற்ற எஜமானுக்கு கீழ்படியமுடியாது. ஒருவனை பகைத்து ஒருவனை பற்றிக்கொள்வான்.
தேவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்ய முடியாது.
பணத்தை நாம் ஆராதிக்க கூடாது. பணத்தை பயன்படுத்த (use) வேண்டும். தேவனை ஆராதிக்க வேண்டும். பணத்தை சேவித்தோம் என்றால், தேவனை ஆராதிக்க முடியாது.
தேவன் தான் பணத்தைக் கொடுக்கிறார். ஆகவே கொடுக்கப்பட்டது பெரியதல்ல, கொடுத்தவர் தான் பெரியவர். கொடுக்கப்பட்ட பணம் பெரியதல்ல, பணத்தைக்கொடுத்த தேவன் தான் பெரியவர்.
பணத்தை பயன்படுத்துங்கள், தேவனைப் பற்றிக்கொள்ளுங்கள். பணத்தை ஒருப்போதும் பணத்தைப் பற்றிக்கொள்ளாதிருங்கள். நமக்கு என்னவெல்லாம் தேவை என்றும் நம் பிதா அறிந்திருக்கிறார்.
மத்தேயு:6:32 “இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.”
தேவனை ஆராதிக்க வேண்டும் என்ற கண்ணோட்டம் நம்முடைய மனதில் இருக்க வேண்டும். பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டம் நமக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்கையிலே எவ்வளவு சம்பாதித்தோம் என்பதைவிட யார் நம்மோடுகூட இருக்கிறார் என்பது தான் அவசியம். ஏனென்றால் தேவன் ஒரு நோக்கத்தோடு தான் இந்த வாழ்கையை நமக்கு கொடுத்திருக்கிறார்.
பணம் நம்முடைய வாழ்கையில் சரியான இடத்தில் இருந்தால், நம்முடைய வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
பணம் உங்களை ஆள ஆரம்பித்துவிட்டால் நாம் அதற்கு அடிமையாகிவிடுவோம். இயேசு உங்களை ஆள ஆரம்பித்துவிட்டால், உங்கள் வாழ்க்கை முழுவதும் ஆசீர்வாதமும், ஐசுவர்யமும் தங்கும்.
ஆமென்…
அடுத்த வாரம் ஊழியத்தில் பணத்தின் கண்ணோட்டம் பற்றி தொடரும்…